பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுவேலம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் கான்கிரீட் சாலையின் குறுக்கே மின்கம்பம் உள்ளது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் இவ்வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் புதிதாக இவ்வழியாக வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கான்கிரீட் சாலையின் நடுவே அமைந்துள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
மோகன், மங்கலம்.