திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பண்ணப்பட்டி கிராமம் வலையப்பட்டியில் சாலையோரம் உள்ள மின்கம்பமும், அதன் அருகே உள்ள மின்மாற்றியும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டத்தின் போது மின்கம்பம் முறிந்து விழுந்தால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பம் மற்றும் மின்மாற்றியை ஆய்வு செய்து சீரமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.