விருதுநகர் மாவட்டம்,சிவகாசி வட்டம் ராமசாமிபுரம் அடுத்து ரத்தினபுரி நகர் பகுதியில் போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபயாமும் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கூடுதல் தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.