கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் பாப்பாக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாகச் சீரமைக்கவோ, மாற்றியமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.