ஆபத்தான நிலையில் மின்சார பெட்டி

Update: 2026-11-01 17:33 GMT
காணை அருகே உமையாள்புரம் கிராமத்தில் மின்சார பெட்டி பல மாதங்களாக உடைந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள மின் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும், மின்சார பெட்டியைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், பாதுகாப்பு வேலியோ எச்சரிக்கை பலகையோ அமைக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் குழந்தைகள் விளையாடி வருவதால், மின்சாரம் தாக்கி விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்