சோளிங்கர் கிழக்கு பஜார் பிள்ளையார் கோவிலில் இருந்து பாட்டிகுளம் செல்லும் சாலையோரத்தில் இரும்பு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து பல வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வழியாகச் சென்ற கனரக வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்து வளைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபாலன், சோளிங்கர்.