ராணிப்பேட்டையில் இருந்து அம்மூர் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். இந்தச் சாலையில் இருந்து ரபீக் நகருக்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலைகள் பிரியும் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அந்த மின்விளக்கு தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பலராமன், அம்மூர்.