பழுதடைந்த மின் கம்பம்

Update: 2026-11-01 18:34 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா சந்தவாசலில் இருந்து படவேடு செல்லும் சாலையில் பங்களாமேடு பஸ் நிறுத்தம் அருகே ஒரு மின்கம்பம் பழுதடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே ெதரிகிறது. இங்கு பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் மின் கம்பம் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரான்சிஸ் சேவியர், பங்களாமேடு. 

மேலும் செய்திகள்