ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-09-20 13:54 GMT

ஏரியூர்-பென்னாகரம் பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி, கல்லூரிக்கு சுற்றுச்சுவரையொட்டி மின் கம்பம், உடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் சாலையில் உடைந்து விழும் நிலையில் ஆபத்தான முறையில் அச்சுறுத்தலாக உள்ளது. மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழும் வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் விரைவில் மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்