விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சேத்தூர், தேவதானம், கோவிலூர், முகவூர், முத்துச்சாமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் குழந்தைகள், சிகிச்சை பெறும் முதியவர்கள் தூக்கமின்றி சிரமத்தை சந்தித்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் நிலவும் மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.