திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி 15-வது வார்டு உடையாம்பட்டி பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பழுதான மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.