சென்னை சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் செருப்பு தைக்கும் பணிக்கூடம் நடத்தி வருகிறார். அந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக சில வாரங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் செருப்பு தைக்கும் பணிக்கூடம் பள்ளத்தில் விழும் அபாய நிலையில் உள்ளது. மழைநீர் கால்வாய் பணி முடிவடைந்தபிறகும், கடையின் அருகே சரிவர பள்ளம் மூடிப்படவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மாநகாட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.