குலசேகரம் அருகே புலியிறங்கி சந்திப்பு உள்ளது. அந்த சந்திப்பில் இருந்து தெற்றிகோடு செல்லும் சாலையின் நடுவே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், பாதசாரிகளுக்கு மின்கம்பத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குரவத்து இடையூறாக காணப்படும் மின்கம்பத்தை மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.