சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த ஊரில் உள்ள ஊராட்சி அலுவலகத்தின் எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் ஆங்காங்கே விரிசல்களுடன் காணப்படுகிறது. அந்த வழியாக அனைத்து தரப்பினரும் சென்று வருகின்றனர். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு இந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.