மின்கம்பத்தால் விபத்து

Update: 2026-07-19 16:08 GMT

ஓமலூர் அருகே மூங்கில்பாடி கிராமம் அவிநாசி நகரில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஏர்காட்டுக்கு செல்லும் உயர்மின் அழுத்த மின்கம்பம் நட்டு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பம் அப்பகுதி வீடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்களோ, அரசோ துரித நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை பாதுகாப்பான இடத்தில் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்