வானமாதேவி, பெத்தாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்பட அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரியத்துறை அதிகாரிகள் சீரான மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.