ஆபத்தான நிலையில் மின்மாற்றி

Update: 2026-08-30 17:36 GMT
திருவந்திபுரம் அடுத்த பில்லாலி தொட்டியில் பிரதான சாலையோரம் அமைந்துள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித பயத்துடனேயே செல்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக அமைச்ச சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்