கம்பம் அருகே கூடலூர் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு அடிக்கடி பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் தினமும் அப்பகுதியில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த உயர்கோபுர மின்விளக்கை விரைந்து சீரமைக்க வேண்டும்.