விபத்து அபாயம்

Update: 2026-08-30 17:37 GMT

சேலம் 4 ரோடு பெரமனூர் அவுசிங்போர்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்மோட்டார் இணைப்புடன் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த மோட்டாரின் மின்இணைப்பு பெட்டியின் சுவிட்ச் பழுதடைந்தது. இதனால் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப மின் மோட்டாரின் மெயின் பிளக்கை எடுத்து இணைக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏறுவது கிடையாது. மேலும் இந்த மின்பெட்டி குழந்தைகள் கையில் பிடிக்கும்படி தாழ்வாக உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மின்ெபட்டியின் சுவிட்சை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்