குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம், சடையம்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் வேலை முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்புபவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஊராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.