தெருவிளக்குகள் எரியவில்லை

Update: 2026-08-30 13:31 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்புறம் மகளிர் சுய உதவி குழு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முன்புற பகுதியில் உள்ள தெரு விளக்குகள் கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் கடைகளுக்கு முன்பு சமூக விரோத செயல்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்