எரியாத தெருவிளக்குகள்

Update: 2026-08-30 10:30 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தகப்பனூர் இடங்கண்ணி மெயின் சாலையில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை உள்ள வீதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் சுகாதார நிலையத்துக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்