அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் உள்ள வார்டுகளின் தெருக்களில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதிகளில் விரைந்து மின்விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியமாகும்.