ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் இருமேனி கிராமத்தில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் இடையே திருட்டு அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர முன்வருவார்களா?