சரவணம்பட்டி ராஜன் லே அவுட் பகுதியில் பெரும்பாலான தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதான தெருவிளக்குகளை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.