டிரான்ஸ்பார்மரை சரி செய்வார்களா?

Update: 2026-08-16 19:34 GMT

கலவையை அடுத்த சிட்டந்தாங்கல் கிராமத்தில் ஏரிக்கரை அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதில் ஒரு மாதமாக மெயின் லைனில் கத்தி போல் உள்ள இடத்தில் விளக்கு போல் இரவு, பகலாக எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாய பம்பு செட்டுகளுக்கு குறைந்த, உயர் மின்னழுத்தத்தில் மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. விவசாய பம்பு செட்டில் மின் மோட்டார் செயல்படும்போது பம்பு செட்டில் உள்ள சாட்டர், கேரியர், கேபிள் ஒயர் ஆகிய அனைத்தும் சூடு பிடிக்கிறது. இதனால் பம்பு செட்டில் உள்ள மின் மோட்டார் காயில் சேதம் அடைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்குமா?

-வாசுதேவன், கலவை. 

மேலும் செய்திகள்