கந்திலி அருகே காக்கங்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செவ்வாத்தூர் செல்லும் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்தத் தரைப்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த பகுதியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்தத் தரைப்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கதிரவன், புதூர் செவ்வாத்தூர்.