வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு கஸ்பா பொன்னிநகரில் அமைந்துள்ள ஒரு மின்கம்பத்தில் மின்விளக்கு அந்தரத்தில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் தொங்கியபடி உள்ளது. அந்த மின் விளக்கு எந்த நேரத்தில் கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த வழியாக சாலையில் நடந்து செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் மின் விளக்கை சரி செய்து எரியவிட வேண்டும்.
-விஜய், வேலூர்.