மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2026-10-04 17:18 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா சந்தவாசலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 10-கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து மருத்துவப் பரிசோதனை செய்தும், சிகிச்சை பெற்றும் செல்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் மின்கம்பத்தில் மின் விளக்கு எரியாமல் உள்ளது. ஆரணி-சந்தவாசல் சாலையில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை மின்விளக்கு அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயக்குமார், சந்தவாசல். 

மேலும் செய்திகள்