நாட்டறம்பள்ளி ஒன்றியம் திம்மாம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகவும், கீழே தொங்கியவாறும் உள்ளது. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது, மின் கம்பிகள் உரசி மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதத்தை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது. தாழ்வாக கீழே தொங்கியவாறு செல்லும் மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்ட மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னப்பா, திம்மாம்பேட்டை.