மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2026-10-04 17:15 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா சந்தவாசல் பெட்ரோல் பங்க் எதிரில் சித்தூர்-கடலூர் சாலை, களம்பூர் செல்லும் சாலை என 3 சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. அங்கு மின் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-முருகன், சந்தவாசல். 

மேலும் செய்திகள்