ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பி.பெ.அக்ரஹாரம் 7-வது வார்டில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பலத்த காற்று அடித்தால் கம்பம் சாய்ந்து அருகே உள்ள வீடுகளின் மீது விழும் அபாயம் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.