திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சதாகுப்பம் கிராமம். அங்கு கிராம சேவை மைய கட்டிடம் எதிரே மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் முழுவதும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மழை நேரத்தில் மின் கசிவால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் முன் வர வேண்டும்.
-வெங்கடேசன், தண்டராம்பட்டு.