ராமநாதபுரம் மாவட்டம் பொன்னாலகோட்டை கிராமத்தில் தண்ணீர் தொட்டி அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.