‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-08-23 13:47 GMT

அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமம் மாதா கோவில் அருகே அடிப்பாகம் உடைந்து சேதமடைந்து இருந்த மின்கம்பம் மாற்றப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்