சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. இதன் இருபுறங்களிலும் உள்ள மின் விளக்குகள் தற்போது சரிவர எரியவில்லை என்றும், இதனால் வாகன ஓட்டிகள், அவ்வழியே நடந்து செல்லும் பெண்கள், பொதுமக்கள், மாணவர்கள், மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். வழிப்பறி மற்றும் விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் உடனடியாக மேம்பாலத்தில் மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.