தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் ஆவின் பால் டிப்போ வாசல் பகுதியில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து ஆபத்தான நிலையில் சாலையோரம் மின்கம்பம் இருந்ததாக நேதாஜி பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து பழுதான மின்கம்பம் மாற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.