நெல்லை டக்கரம்மாள்புரம் வடக்குதெரு வழியாக மேலப்பாளையம் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனே அந்த சாலையில் தெருவிளக்கு வசதி செய்து தருமாறு வேண்டுகிறேன்.