திருச்சி மாவட்டம் நெடுங்கூர் கிராமம் அகரம் குறுக்கு சாலை பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.