திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அருகே வடமாதிமங்கலம் கூட்ரோடு பகுதியில் இருந்து வடமாதிமங்கலத்துக்கு செல்ல சாலை உள்ளது. இந்தச் சாலையை வடமாதிமங்கலம், கீழ்பட்டு, கூடலூர், அரியத்தூர், திருமலை, சதுப்பேரி, ஒத்தியந்தல், ராயகுப்பம். உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையோரம் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் பெண்கள், மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். தெருவிளக்குகளை சீரமைத்து எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், வடமாதிமங்கலம்.