எரியாத மின்விளக்குகள்

Update: 2026-07-12 14:23 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள கடைவீதிப் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளும், பெண்களும் கடும் இருளில் பயத்துடனும், பாதுகாப்பற்ற சூழலிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மேம்பாலத்தின் கீழ் உள்ள மின்விளக்குகள் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்