திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் கிராமம் எம்.ஜி.ஆர். நகரில் மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் சிமெண்ட் பெயர்ந்தும், வயர்கள் இணைப்பில் இருக்கும் கம்பி உடைந்தும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.