சென்னை எர்ணாவூர், எர்ணீஸ்வரர் நகர் 3-வது தெருவில் மின் பெட்டி உள்ளது. இந்த மின்பெட்டி கதவுகள் இல்லாமல் ஆபத்தான வகையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் மிகுந்த அச்சத்துடனே அதனை கடந்துசெல்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் இதனால் பெரும் விபரீதம்ஏற்படும் அபாயம் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரி செய்யவேண்டும்.