மின்கம்பம் சேதம்

Update: 2026-07-05 18:55 GMT

வந்தவாசி நகராட்சி 22-வது வார்டில் சாமுண்டீஸ்வரி தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால் எந்த நேரத்திலும் கீழே விழலாம். ஆபத்தான அந்த மின் கம்பத்தை மாற்றி புதிய கம்பம் அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோகுலகிருஷ்ணன், கெஜலட்சுமி நகர், வந்தவாசி.

மேலும் செய்திகள்