கணபதி மாநகர் பேஸ்-1 பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதுது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தெருவிளக்குகளை பழுது நீக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.