ஆலங்காயம்-கல்கோவில் பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரே பெரிய ஏரி உள்ளது. நீர் நிறைந்த ஏரியின் நடுவே அமைக்கப்பட்ட ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மின்சாரம் ஏரி நீரில் கசிந்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோவிந்தராஜன், ஆலங்காயம்.