அரியலூர் ஒன்றியம் நாகமங்கலம் மாதா கோவில் சுடுகாடு அருகே, மெயின் ரோட்டிலிருந்து பட்டகட்டாங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து, அடிப்பகுதி கம்பிகள் வெளியே தெரிந்தபடி எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான சூழலில் இந்த மின்கம்பம் உள்ளது. பெரிய அளவிலான விபத்து ஏதேனும் ஏற்படும் முன், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.