உயர்கோபுர மின்விளக்குகள் ஒளிருமா ?

Update: 2026-07-05 12:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாறு வார்த்தலையில் விக்ரமன் ஆற்று பாலம் உள்ளது. இந்த இடத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே உரிய பராமரிப்பு செய்து உயர் கோபுர மின் விளக்குகளை முறையாக எரியவைக்க வேண்டும்.

பொதுமக்கள், குத்தாலம்.

மேலும் செய்திகள்