தென்தாமரைக்குளம் ஐ.ஓ.பி.தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி அந்த பகுதியில் பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றிவிட்டு புதிய விளக்குகள் பொருத்தி ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜேசு செல்வ பெரோஸ்மின், தென்தாமரைக்குளம்.