தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளி பவனமங்கலம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் கொடிகள் சூழ்ந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனை ஆடு, மாடுகள் மேயும் பொழுது உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பவனமங்கலத்தில் ஆபத்தான வகையில் மின்கம்பத்தில் படர்ந்து இருக்கும் செடி, கொடிகளை மின்வாரியத் துறையினர் அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், பவனமங்கலம்.